tamilnadu

img

கொலம்பியா: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கொலம்பியாவின் பலன் கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பேருடன் கடந்த வெள்ளியன்று இரவு புறப்பட்டது. இந்நிலையில் ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரை தேடும் பணி நடை பெற்றது. அப்போது அந்நாட்டின் அல்பன் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுக்கியிருப்பது தெரியவந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.