tamilnadu

img

70 லட்சம் பேருக்கு பாதிப்பு... 4 லட்சம் பேர் பலி...  மிரட்டும் கொரோனா வைரஸ்....    

தில்லி 
பல்வேறு கட்டுப்பாடு, புதுமையான ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டாலும் கொரோனா வைரஸ் "என் வழி தனி வழி" என்ற போக்கில் பயணித்து உலகை தொடர்ந்து மிரட்டி வருகிறது. 

இந்த கொடிய கொரோனா வைரஸால் உயிரிழப்பு மட்டுமின்றி, மக்களின் இயல்பு நிலை, வறுமை போன்றவைகளும் ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஓசியானியா, ஆப்பிரிக்கா கண்டங்களை தவிர மற்ற 4 கண்டகளிலும் (ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா) கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை குறைக்காமல் அதிரடி காண்பித்து வருகிறது.  

இந்நிலையில் உலகம் முழுவதும் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. 34 லட்சம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 19 லட்சத்து 88 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஆறுதல் செய்தியாக 7 லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். 

அமெரிக்காவிற்கு அடுத்து பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் குறுகிய காலத்தில் அதிக சேதாரத்தை சந்தித்துள்ளது. அதிக மக்கள் தொகை நாடுகளில் ஒன்றான இந்தியாவும் உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் மேல்நோக்கி முன்னேறுவதால் பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பில் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரிக்கும் என அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.   

;