tamilnadu

img

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் உள்ள 8 மாவட்டங்களுக்கு திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தொடக்க இடமான கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் கனமழையின் காரணமாக கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாக்குளம், மலப்புரம், வயநாடு, இடுக்கி மற்றும் கோழிக்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.