tamilnadu

img

நாங்கள் கேரளத்திலேயே இருந்து கொள்கிறோம்...

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர்வரை பல்வேறு தொழில்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் களும் கணிசமாக உள்ளனர்.

தற்போது கொரோனா ஊரடங்கையொட்டி, பிற மாநிலங்களில் பணியாற்றும்அசாம் மாநிலத்தவர் எல்லாம் சொந்த ஊருக்கு திரும்பிவிட்ட நிலையில், கேரளத்தில் இருக்கும் அசாம் மாநிலத் தொழிலாளர்கள் மட்டும் ஊருக்குச் செல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.கேரள அரசைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய வசதிகளை செய்துதந்து கொண்டிருக்கிறது. தரமானஅடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுப் பது, அவரவர்களின் சொந்த ஊர் உணவுகளை சமைத்து வழங்குவது, தொழிலாளர்களின் செல்போன்களை ரீசார்ஜ் செய்வது, பொழுதுபோக்கு அம்சங்களை அளிப்பது என மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இதனால் புலம்பெயர் தொழிலாளர் களும், தாங்கள் வெளிமாநிலத்தில் தங்கியிருக்கிறோம் என்ற நினைப்பே  இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் கேரளாவில் தங்கியுள்ளனர்.இந்தப்பின்னணியில்தான், தற்போது கொரோனா காலத்திலும் அவர்கள் சொந்தஊர் திரும்ப விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் அவர்களை அணுகி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கஏற்பாடு செய்கிறோம் என்று கூறியும், அசாம் தொழிலாளர்கள் அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக கேரளாவில் வேலைசெய்து வரும் அசாமின் தீமாஜி மாவட்டத் தைச் சேர்ந்த திம்பேஸ்வர் பருஹா என்பவர் கூறும்போது, “ஒருசிலரை தவிர, மற்றஅனைவரும் இங்கே நன்றாக இருக்கிறோம். அசாமிற்கு திரும்பி செல்ல விரும்பவில்லை. எங்கள் முதலாளி ஒருமுறை கூடசொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லுங் கள் என்று கூறவில்லை. எங்களின் சம்பளத்தை சரியாக அளித்து வருகிறார். தேவையான உணவையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள் ளார்.மேலும், “கேரள டிஜிபி தனது செல்போன் எண்ணை அளித்துள்ளார்; எந்தநேரத்திலும் உதவிக்காக அழைக்கலாம் என்று கூறியுள்ளார்; போலீசார் அவ்வப் போது எங்களை அழைத்துப் பேசி நலம்விசாரித்து வருகின்றனர். உள்ளூர் மக்களும் எங்களுக்கு தேவையான வசதிகளைசெய்து கொடுக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

அசாமின் லகிம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவரும், தற்போது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஐஸ் தொழிற் சாலையில் பணியாற்றி வருபவருமான மந்து தத்தா அளித்துள்ள பேட்டியில், “ஊராட்சித் தலைவர்கள் எங்களுக்கு தேவையானதைத் தருகின்றனர். தொடர்ச்சியாக எங்கள் நலனை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர் இப்படியொரு சூழலில் யாருக்குத்தான் திரும்பிபோகும் எண்ணம் வரும்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையிலான தொழிலாளர்கள் கேரளாவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;