tamilnadu

img

கோவிட்டை கட்டுப்படுத்த மும்பையில் கேரள மருத்துவக்குழு

திருவனந்தபுரம்:
மும்பையில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி துணை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.சந்தோஷ்குமார் தலைமையிலான முதலாவது மருத்துவக்குழு சென்ற டைந்துள்ளது.  உலகில் கோவிட் நோய் அதிகமாக பரவும் நகரங்களில் இரண்டாவது இடத்தில்மும்பை நகரம் உள்ளது. நாட்டில் அதிக அளவில் கோவிட் நோயாளிகளை கொண்டதாகவும் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது.

இந்நிலையில் 50 மருத்துவர்களையும், 100 செவிலியர்களையும் அனுப்பி வைக்குமாறு மகாராஷ்டிர அரசு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவிடம் கேட்டுக்கொண் டது.முதல் கட்டமாக டாக்டர்.சந்தோஷ்குமார், டாக்டர் ஸஜித் ஆகியோர் மும்பை சென்றனர். தன்னலமற்ற பணிக்கு தயாராக உள்ளமருத்துவர்களும் செவிலியர்களும் இந்த குழுவில் உள்ளனர். இவர்களுக்கான தங்குமிடம் மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்வதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அது உறுதியானதும் மற்றவர்களும் மும்பை புறப்படத் தயாராக உள்ளனர். மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ்-இல் அமைக்கப்படும் 600 படுக்கை கோவிட்மருத்துவமனையில் இந்த குழு சிகிச்சை அளிக்க உள்ளது.

காசர்கோடு மருத்துவக் கல்லூரி அக்காடமிக் பிளாக்கில் கோவிட் மருத்துவமனை அமைக்கப்பட்டபோது துவக்கத்தில் சிகிச் சைக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது டாக்டர் சந்தோஷ் குமார் தலைமையிலான மருத்துவக்குழுவாகும். மும்பையிலும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது, தேவைக்கேற்ப மருத்துவமனையின் கட்டமைப்பை மறுசீரமைப்பது, சேர்க்கை முதல் நோயாளியை குணப்படுத்தி அனுப்புவது வரை பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறையை தீர்மானிப்பதில் இந்து குழு முக்கியத்துவம் அளிக்கும்.

;