tamilnadu

img

கேரளத்தில் மூன்றாவது கொரோனா மரணம்

கோழிக்கோட்டில் 4 மாத குழந்தை பலி

கோழிக்கோடு, ஏப்.24- கொரோனா பாதிப்புடன் கோழிக்கோடு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத குழந்தை வெள்ளியன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இத்துடன் கேர ளத்தில் கொரோனாவு க்கு பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மலப்புறம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த 4 மாத குழந்தை கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தது. உடல்நல பிரச்ச னைகளுடன் பிறந்த இந்த குழந்தை மருத்துவமனை யின் தனிமை வார்டில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தது. வள ர்ச்சி மற்றும் எடை குறைபாடு டன் சிகிச்சைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

முன்னதாக ஏப்ரல் 17இல் வீட்டில் வைத்து மூச்சுத் திண றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து குழந்தையை மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக் கான அனுமதித்துள்ளனர். நிமோனியா காய்ச்சல் ஏற் பட்டதைத் தொடர்ந்து மற் றொரு தனியார் மருத்துவ மனைக்கு மாற்றியுள்ளனர். அங்கிருந்து கோழிக்கோடு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளனர். குழந்தையின் தாய் தந்தைய ருக்கு கோவிட் பாதிப்பு இல்லை. குழந்தைக்கு எங்கிருந்து நோய் தோற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்பட வில்லை.

உணவு குறித்து ஆய்வு

குழந்தையின் உயிரிழப்பு குறித்து அமைச்சர் கே.கே. சைலஜா கூறுகையில், வெளி யில் உள்ள யாரும் வீட்டுக்கு வரவில்லை என கூறுகிறார் கள். குழந்தைக்கு கொடுத்த உணவுகள் குறித்து கூடுதல் விசாரணை நடத்தப்படு கிறது. இளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடம் மிகு ந்த கவனம் தேவை. கேரளத் தில் நோய் தொற்று மிகவும் குறைந்து வருகிறது. ஆனால், எச்சரிக்கையை கை விடக் கூடாது. கொரோனா வால் பாதிக்கப்பட்டவர் களின் சிகிச்சைக்காக மருத்து வர்களின் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சாத்திய மான சிறந்த சேவைகளை அளிக்க முயன்று வருவ தாக கூறினார்.