tamilnadu

img

சங்பரிவாரின் வகுப்புவாத வெறியாட்டம் ‘மின்னல் முரளி’ படப்பிடிப்பு அரங்கு தகர்ப்பு

காலடி, மே 26- காலடியில் மின்னல் முரளி படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட தேவா லயம் போன்ற அரங்கை பஜ்ர ங்தள சங்பரிவார் அமைப்பி னர் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தகர்த்துள்ளனர். இதில் ராஷ்டிரிய பஜ்ரங்தளத்தின் மாவட்ட தலைவர் காரி ரதீஷ்  உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். பேசில் ஜோசப் இயக் கும் மலையாள திரைப்படம் ‘மின்னல் முரளி’. டோவினோ தாமஸ் நடிக்கும் இத்தி ரைப்படத்துக்கான படப்பி டிப்பு காலடியில் நடந்து  வந்தது.காலடி மணப்பு றத்தில் தேவாலயம் போன்ற அரங்கு அமைக்க ப்பட்டிருந்தது. கோவிட் 19 ஊரடங்கை தொடர்ந்து படப்பிடிப்பு தடைபட்டது. சூழ்நிலை சரியானதும் பட ப்பிடிப்பை மீண்டும் துவக்க முடிவு செய்திருந்தனர்.

இந்நி லையில் படப்பிடிப்பு அரங்கு  தகர்க்கப்பட்டது. இதற்கு சங்பரிவார் அமைப்பு பொ றுப்பேற்றுக் கொண்டது. தங்களது வகுப்புவாத நிகழ் ச்சி நிரலுக்கு எதிரானது என கருதும் எதையும் அழித்து ஒழிக்கும் வழக்கத்தின்படி இந்த சம்பவம் நடந்துள்ள தாக சட்டம் மற்றும் கலாச்சா ரத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் குற்றம்சாட்டினார். இதுபோன்ற நோக்கம் கேரளத்தில் விலைபோகாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இது குறித்து கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அரங்கு தகர்க்கப்பட்டது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமான பெப்கா சார்பில்  ஆலுவா ரூரல் எஸ்பியிடம்  புகார் அளிக்கப்பட்டது. அதன்படி விசாரணை நடத்தி யதில் ராஷ்டிரிய பஜ்ரங்த ளத்தின் மாவட்டத் தலை வர் காரி ரதீஷ் என்கிற மல யாற்று ரதீஷ் தலைமை யிலான கும்பல் சதித்திட்டம் தீட்டி அரங்கத்தை நாசப்ப டுத்தியது தெரியவந்தது.

ரதீஷ் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டவராவார். 2 ஆண்டுகளுக்கு முன்பு கால டியில் ஸனல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். அதன்பிறகு ராஷ்டிரிய பஜ்ரங்தள தலைவரானார். வகுப்புவாத அடிப்படை யிலான இந்த குற்றச் செய லில் 5 பேர் கொண்ட கும்பல்  ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதில் மற்றொரு குற்றவாளி யான ராகுல் என்பவரை செவ்வாயன்று கைது செய்த னர். மற்றவர்களை தேடி வரு கின்றனர்.