tamilnadu

img

தங்க கடத்தல் வழக்கில் பாஜகவின் தொடர்பை மறைக்க தீவிர முயற்சி.... கேள்வித்தாளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு

திருவனந்தபுரம்:
துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக ஜெனரல், அட்டாசே ஆகியோரிடம் கேள்வித்தாளை அனுப்பி, தங்கக் கடத்தல் வழக்கு குறித்து விளக்கம் கோருவதற்கான சுங்கத்துறையின் முயற்சியை மத்திய அரசு தடுத்துள்ளது.சுங்கத்துறையால் தயாரிக்கப்பட்ட கேள்விகள் பாஜகவை சிக்க வைக்கும் என்பதால் வெளியுறவு அமைச்சகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விசாரணை தூதரக உறவுகளை பாதிக்கும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. மத்திய அமைச்சர் வி.முரளீதரன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை நோக்கி விசாரணை நீ்ள்வதைத் தடுக்கவே வெளியுறவு அமைச்சகத்தின் இந்த தலையீடு.

பறிமுதல் செய்யப்பட்டது தூதரக பார்சல்கள் அல்ல என்று கடிதம் அளிக்குமாறு ஜனம் டிவி ஒருங்கிணைப்பு ஆசிரியர் அனில் நம்பியாரு கேட்டுக்கொண்டாரா, பாஜகவுக்கு உதவ வேண்டும் என்று அனில் கேட்டுக்கொண்டாரா போன்ற கேள்விகளை சுங்கத்துறை தயாரித்துள்ளது. கேள்வித்தாள் அப்படியே அனுப்பப்பட்டு, தூதரகம்மற்றும் அட்டாசே அவற்றுக்கு பதிலளித்தால், பாஜக முற்றிலுமாக மாட்டிக் கொள்ளும். தங்கம் கடத்தியது தூதரக பார்சலில் அல்ல என்று மத்திய அமைச்சர் வி.முரளீதரன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் வரை தங்கக்கடத்தல் குறித்து சந்தேகம் நீண்டது.அட்டாசேயின் பெயரில் தூதரக பார்சலில்தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வழங்கிய ஆவணங்களைப் பயன்படுத்தி சரித்தும் சொப்னாவும் பலமுறை இதற்கு முன்பு பார்சல்களைப் பெற்றனர். அட்டாசேக்கு இதற்காக கமிசன் கொடுத்ததாக சொப்னா தெரிவித்தார். சரித் மற்றும் சொப்னாவை தூதரகத்திலிருந்து நீக்கிய பின்னரும், தூதரக ஜெனரல் இவர்களை பார்சல்களை எடுக்க பயன்படுத்தியுள்ளார் என்பதை சுங்கத்துறை ஏற்கனவே தெளிவுபடுத்தியது. தங்கக் கடத்தல் வழக்கின் விசாரணையை முடிக்க தூதரக ஜெனரல் மற்றும் அட்டாசேயின் பதில்கள் அவசியம். இதற்கான முதல்படியாக கேள்வித்தாள்கள் மூலம் தகவல்களை சேகரிக்க சுங்கத்துறை மத்திய அரசை அணுகியது.

பாஜக தொடர்பை மறைக்க
கேள்வித்தாளை திருப்பி அனுப்புவதற்கான காரணமாக மத்திய அரசு கூறியிருப்பது அந்த கேள்விகள் தூதரக உறவுகளை பாதிக்கும் என்பதாகும். சிலகேள்விகளை தவிர்த்தால் அனுமதியளிக்க பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில்பாஜகவின் தொடர்பு வெளிவர சாத்தியமான கேள்விகளைத் தவிர்க்கவே இந்த நகர்வு. ஆனால், இந்த கேள்விகளுக்கான பதிலைத் தவிர்த்து வேறு தகவல்களைச் சேகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று புலனாய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.

;