tamilnadu

டிசம்பர் 8, 10, 14 தேதிகளில் கேரள உள்ளாட்சித் தேர்தல்....

திருவனந்தபுரம்:
கேரள உள்ளாட்சி தேர்தல்கள் டிசம்பர்8, 10, 14 தேதிகளில் நடைபெறுகிறது. 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் உட்பட 1,119 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும்.

டிசம்பர் 8: திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி. டிசம்பர் 10: கோட்டயம், எர்ணாகுளம்,திருச்சூர், பாலக்காடு, வயநாடு. டிசம்பர் 14: மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் தேர் தல் நடைபெறும்.வாக்கெடுப்பு தேதிகள் அறிவிக்கப் பட்ட நிலையில், மாதிரி நடத்தை விதிமுறை மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. மாநிலத்தில் கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெறும் முதல்தேர்தல் இதுவாகும். தேர்தலை நடத்துவதற்கு கடுமையான கோவிட் நெறிமுறைவைக்கப்பட்டுள்ளது. கோவிட் நேர்மறைநோயாளிகளுக்கும் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் அஞ்சல் வாக்கு வசதி வழங்கப்படும்.அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப் பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.29 கோடி ஆண் வாக்காளர்கள், 1.45 கோடி பெண்கள் மற்றும் 282 மூன்றாம் பாலினத்தோர் வாக்காளர்களாக உள்ளனர். துணை வாக்காளர் பட்டியல் நவம்பர்10 அன்று வெளியிடப்படும். பதிவான வாக்குகள் டிசம்பர் 16 ஆம் தேதி எண்ணப்படும்.