tamilnadu

img

உச்சம் தொடும் ‘லைப்’ வீடு கட்டும் திட்டம்.... 1285 குடும்பங்களுக்கான 29 வளாகங்கள் கேரள முதல்வர் அடிக்கல் நாட்டினார்..

திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் லைப் திட்டத்தின் ஒரு பகுதியாக 29 வீட்டு வளாகங்களுக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு அமைச்சர் ஏ.சி. மொய்தீன் தலைமை தாங்கினார். 29 கட்டுமான இடங்களிலும் நடைபெற்ற விழாக்களில் அந்தந்த மாவட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

இவற்றின் மூலம் 1285 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. கட்டுமான செலவு ரூ.181.22 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீட்டு வளாகங்களின் கட்டுமான பணிகள் அடுத்த மே மாதத்திற்குள் நிறைவடையும்.லைப் வீட்டுவசதி திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் நிலமும் வீடுமற்ற பயனாளிகளுக்காக 101 வீட்டு வளாகங்களை ஒரு வருடத்திற்குள் முடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவற்றில், 12 வீட்டு வளாகங்களின் கட்டுமானப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

நாட்டிலேயே மிக அதிக அளவாக கேரளத்தில் 2லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் லைப் திட்டத்தின் மூலம் கட்டிமுடித்து பயனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. அரசின் இந்த சாதனையைஎதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களால் தகர்க்க முடியாது எனவும், அவர்களது எதிர்ப்பு காரணமாக கட்டுமான பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் முதல்வர் கூறினார்.

;