tamilnadu

img

கேரள தேர்வு முடிவு எந்தவொரு கொள்ளை நோயையும் சமாளிக்க முடியும் என்பதற்கு சான்று...

திருவனந்தபுரம்:
எத்தனை கடுமையான நெருக்கடியின் முன்பும் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகி விடக்கூடாது என்ற அரசாங்கத்தின் முடிவிற்கும், அதற்குமக்களின் ஆதரவிற்கும் கிடைத்த வெற்றியே எஸ் எஸ் எல் சி தேர்வு முடிவுகள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும், விவாதத்தையும் உருவாக்க வேண்டுமென்றே முயற்சித்தபோதிலும், கோவிட் 19 கொள்ளை நோய் ஏற்படுத்தியசவாலை சமாளித்து ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம்தான் தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தி, முடிவுகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டன. தேர்வுகளை பாதுகாப்பாக நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் அயராது உழைத்துள்ளனர் என்று முதல்வர் கூறினார்.

எந்த கொள்ளைநோய் வந்தாலும், எவ்வளவு பெரிய வெள்ளம் பெருக்கெடுத்தாலும், யாரெல்லாம் எதிராக நின்றாலும், கேரளா ஒன்றுபட்டு அதைவெல்ல முடியும் என்பதற்கான ஆதாரத்தை நாம்கண்டிருக்கிறோம். இந்த நிலையில் மிகவும்பயனுள்ள செயல்பாடுகளுடன் முன்னேறுவ தற்கான ஆற்றலையும் நம்பிக்கையையும் இந்த சாதனை நமக்கு அளிக்கட்டும்.எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் சிறந்த முடிவுகள் வெளியாகி உள்ளன. உயர் படிப்புக்கு தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். உயர் படிப்புக்கு தகுதி பெறாதவர்களும் தேர்வு எழுத முடியாதவர்களும் ஏமாற்றமடையாமல், எதிர்வரும் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.

;