tamilnadu

img

பிளவை நோக்கி கேரள காங்கிரஸ் (எம்)

திருவனந்தபுரம்:
கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான கேரள காங்கிரஸ் (எம்) லிருந்து அந்த கட்சியின் மக்களவை உறுப்பினரான ஜோஸ் கே.மாணி ஏற்கனவே விலகி விட்டதாக செயல் தலைவர் பி.ஜே.ஜோசப் கூறியுள்ளார்.

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவராக இருந்த கே.எம்.மாணி கடந்த ஏப்ரலில் காலமானார். இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் செயல் தலைவர் பி.ஜே.ஜோசப்புக்கும் கே.எம். மாணியின் மகன் ஜோஸ் கே.மாணிக்கும் இடையே அதிகார மோதல்நீடித்து வருகிறது. கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவராக, ஜோஸ்கே.மாணி கடந்த ஜூனில் தேர்வு செய்யப்பட்டார். அந்தத் தோ்தல் செல்லாது என்று அறிவித்த கட்சியின் செயல் தலைவர் பி.ஜே.ஜோசப் தலைமையிலான அதிருப்தி அணியினர், ஜோஸ் கே.மாணி தலைவராக செயல்பட கட்டப் பனா நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவு பெற்றனர். இதையடுத்து, இடுக்கிமாவட்ட நீதிமன்றத்தில் ஜோஸ் கே.மாணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கட்சியில் மொத்தமுள்ள 437 மாநிலக் குழு உறுப்பினா்களில், 325 உறுப்பினா்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக அவா் கூறியிருந்தார்.அந்த மனு மீது வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிமன்றம், தற்போதைய நிலையில் இந்தவிவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, மனுவை நிராகரித்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஜே.ஜோசப், கேரள காங்கிரஸ் (எம்) ஒரே ஒரு கட்சியே உள்ளது. ஏற்கெனவே ஜோஸ்கே.மாணி வலகி சென்று விட்டதால் அவரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இப்பிரச்சனை குறித்து விவாதிக்க உள்ளதாக யுடிஎப்அறிவித்துள்ளது.

பாலா இடைத்தேர்தல் தோல்வி
பாலா சட்டமன்ற இடைத்தேர்தலில் யுடிஎப் வேட்பாளராக கேரளகாங்கிரஸ் (எம்) சார்பில் போட்டியிட்ட ஜோஸ் டோமுக்கு கட்சி சின்னமான இரட்டை இலையை வழங்க செயல்தலைவர் பி.ஜே.ஜோசப் மறுத்தார்.இதில் சமரசத்துக்கு யுடிஎப் தலைவர்கள் முயன்றும் பயனளிக்கவில்லை. வேறு வழியின்றி சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இந்த தேர்தலில் எல்டிஎப் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணி சி காப்பன் வெற்றி பெற்றார். 54 ஆண்டுகாலமாக யுடிஎப் கோட்டையாக விளங்கிய தொகுதி முதல்முறையாக எல்டிஎப் வசம் வந்தது.

;