tamilnadu

தனிப்பட்ட அவதூறு- போலி செய்திகளை தடுக்க மக்கள் தொடர்பு துறையில் சிறப்பு ஏற்பாடு கேரள முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம், ஆக.12- தனிப்பட்ட அவதூறுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பிற ஊடகங்களில் இருப்பவர்களும் தனிப் பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. போலி செய்திகளை வேண்டுமென்றே பரப்பும் சில மையங்களும் உள்ளன. இதுபோன்றவற்றைக் கண்டறிய மக்கள் தொடர்புத்துறை ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது என்று முதல்வர் கூறினார். இதுபோன்றவற்றில் சட்டத்திற்கு வலு தேவை என்று ஒரு கருத்து உள்ளது. தவ றான செய்திகள், அவமதிப்புகள், ஆள்மாறா ட்டம், எதையும் கூறலாம் என்கிற நிலை ஆகியவற்றை உறுதியாக கையாள வேண்டும் என்று அரசு கருதுகிறது. எந்த வொரு பகுதியிலும் தனிப்பட்ட அவதூறுகள் செய்யப்படும் போது, தங்களுக்கு எதிராக இருந்தால் போற்றுவதும், எதிராக இருந் தால் தூற்றுவதுமான மாறுபட்ட அணுகு முறை கூடாது. இதில் எல்லோரும் ஒரே அணுகுமுறையை கொண்டிருக்க வேண் டும். கருத்தியல் விவாதங்கள் இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் ஊடக வியலாளர்களை அவமதித்த புகார் விசா ரணைக்கு விடப்பட்டுள்ளது என்றும் முதல் வர் கூறினார்.

;