tamilnadu

img

நேர்மைக்கு ஐஎஸ்ஓ சான்று…

நேர்மையான ஒருவரைப்பற்றி பொதுமக்கள் கூறும்போது ‘அவர் ‘ஸ்ரெயிட் பார்வேர்ட்’ என்பார்கள். கேரளத்தில் பொதுமக்கள் முதல்வருக்கு புகார் அளிக்கும் ஆன்லைன் வசதிக்கு பெயர் ‘ஸ்ரெயிட் பார்வேர்ட்’ என்பதாகும். பொருத்தமான இந்த ஏற்பாடுக்கு இப்போது ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சேவைக்கான நேரடி (ஆன்லைன்) ஏற்பாடுக்கு இத்தகைய சான்று வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

‘ஸ்ரெயிட் பார்வேர்ட்’ மூலம் இதுவரை 2,67,018 புகார்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. புகார்களின் எண்ணிக்கை மற்றும் செயல் திறன் அடிப்படையில் நாட்டிலேயே மிகச்சிறந்த தீர்வு காண்பதற்கான ஏற்பாடாக ‘ஸ்ரெயிட் பார்வேர்ட்’ உருவெடுத்துள்ளது. 
 

;