tamilnadu

img

நகைக்கடை உரிமையாளர், தொழிலதிபர் உட்பட தங்கக் கடத்தலில் மேலும் மூவர் கைது

கோழிக்கோடு, ஜூலை 16- தங்கக் கடத்தல் தொடர்பாக கோழிக்கோடு எராஞ்சிகலைச் சேர்ந்த சம்ஜு (39) கைது செய்யப் பட்டார். நகைக்கடைக்காரர்களுக்கு தங்கத்தை கடத்திய கும்பலின் தலைவன் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். கொச்சி ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் சம்ஜுவை கோழிக்கோடு சுங்க தடுப்பு பிரிவு படை கைது செய்தது. கொச்சியில் உள்ள சுங்கத்துறை தலைமை யகத்தில் அவரிடம்  விசாரணை நடந்தது. எராஞ்சிகலில் உள்ள மியாமி கன்வென்ஷன் சென்டரில் சம்ஜுஒரு பங்குதாரர் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே தங்க கடத்தல் தொடர்பாக சம்ஜுவின் சகோத ரர் மற்றும் மாமியாரை டி.ஆர்.ஐ கைது செய்திருந்தது. திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர் விசாரணையின்போது அளித்த தகவலின் அடிப்படையில், சுங்கத்துறையினர் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள சில நகைக்கடைகளை ஆய்வு செய்தனர். தங்க கடத்தல் வழக்கி கைது செய்யப்பட்ட ரமீஸின் கூட்டாளிகளான மஞ்சேரி எஸ்.எஸ்.ஜுவலரி உரிமை யாளர் டி.எம்.முகம்மது அன்வர் (43), வேங்ஙராவைச் சேர்ந்த சையதலி (43) ஆகியோரும் வியாழனன்று கைது செய்யப்பட்டனர்.

;