tamilnadu

img

இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவருக்கு கோவிட்... தொடர்பு பட்டியல் கண்டறிவதில் சிரமம்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்தாம்கோட்டை எம்.எல்.ஏ அலுவலகத்திலிருந்து காவல் நிலையம் நோக்கியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கியும் நடந்த பேரணிகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கோவிட் கட்டுப்பாடுகளை மீறி பங்கேற்றனர். அதன் மூலம் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பு பட்டியல் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கொல்லத்தில் கோவிட் விதிமுறைகளை மீறி காங்கிரஸ் கட்சியால் இந்த பேரணிகள் நடத்தப்பட்டன. முக கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் நூற்றுக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தொடங்கி வைத்த கேபிசிசி துணைத் தலைவர் மற்றும் கேபிசிசி பொதுச் செயலாளர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கண்காணிப்புக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மாநில அரசின் கோவிட் பாதுகாப்பை சீர்குலைக்கும் கேபிசிசியின் திட்டத்திற்கு அடிமட்ட தொண்டர்களை இரையாகியுள்ளனர். கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்தும், கோவிட் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதன் மூலம், குன்னத்தூர் தொகுதி மீண்டும் கோவிட் தொற்று பரவலுக்கு உள்ளாகும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மைநாகப்பள்ளி, சூரநாடு தெற்கு, சூரநாடு வடக்கு, போருவழி. சாஸ்தாம்கோட்டா, மேற்கு கல்லடா, கிழக்கு கல்லடா, குன்னத்தூர், மந்தோதுருத்து மற்றும் பவித்ரேஸ்வரம் ஆகிய பஞ்சாயத்துகளிலிருந்து இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களில் பாதி பேர் பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். நோய் உறுதி செய்யப்பட்டது சுகாதார ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

;