கேரள முதல்வர் தகவல்
திருவனந்தபுரம், ஏப்.22- கேரளத்தில் 96.66 சதவிகிதம் குடும்ப அட்டைகளுக்கு இலவச ஏப்ரல் மாதத்துக் கான ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு விட்ட தாகவும், மே மாதத்துக்கான பொருட்கள் கடை களில் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல் வர் பினராயி விஜயன் கூறினார்.
செவ்வாயன்று செய்தியாளர்கள் சந்திப் பின் போது அவர் மேலும் கூறியதாவது: மொத் தமுள்ள 87 லட்சத்து 29 ஆயிரம் குடும்ப அட்டைகளில் 84 லட்சத்து 45 ஆயிரம் அட்டை களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான ரேசன் விநியோ கம் வழங்கப்பட்டுவிட்டது. இதுவரை 1,40,272 மெட்ரிக் டன் அரிசியும் 15,007 மெட்ரிக் டன் கோதுமையும் விநியோகமாகி உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின்படி வழங்கப்படும் இலவச அரிசி விநியோகம் திங்களன்று துவங் கியது. மஞ்சள், பிங்க் அட்டைகளுக்கான இந்த விநியோகம் ஏப்ரல் 26இல் நிறைவடை யும். ஏப்ரல் 27 முதல் மாநில அரசு வழங்கும் இலவச மளிகை பொருட்கள் விநியோகிக்கப் படும். அந்தியோதயா குடும்பங்களில் உள்ள 5,74,768 மஞ்சள் அட்டைகளுக்கான விநியோ கம் நிறைவடைந்துள்ளது. சுமார் 31 லட்சம் பிங்க் அட்டை குடும்பங்களுக்கான ரேசன் வழங்கப்பட்ட பிறகு மீதமுள்ள குடும்பங் களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படும் என்றார்.
19 பேருக்கு கொரோனா
செவ்வாயன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 10 பேர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள னர். அவர்களில் 9 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். காசர்கோடு 3, பாலக்காடு 4, மலப்புறம், கொல்லம் தலா ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது. பாலக்காடு, மலப்புறம், கொல்லம் மாவட்டங்களில் நோய் கண்டறியப்பட்டவர்களில் தலா ஒருவர் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களாவர். இதுவரை நோய் கண்டறியப்பட்டவர்களின் எண் ணிக்கை 426, அதில் 117 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது வீட்டு கண்காணிப்பில் 36,355 நபர்களும், மருத்துவமனையில் 332 நபர்கள் என மொத்தம் 36,667 நபர்கள் கண் காணிப்பில் உள்ளனர். செவ்வாயன்று 102 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இதுவரை 20,252 மாதிரிகள் பரிசோத னைக்கு அனுப்பியதில் 19,442 நோய் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. மிக அதிக நோயா ளிகள் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் ஊர டங்கின் கடடுப்பபாடுகள் முழுமையாக கடைப் பிடிக்கப்படும் என முதல்வர் கூறினார்.