tamilnadu

img

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இலவசமாக ரேசன்: கேரள அமைச்சரவை முடிவு

திருவனந்தபுரம்:

கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்கரை கிராம மக்களுக்கு ஒரு மாதத்துக்கு இலவசமாக ரேசனில் உணவுப்பொருட்கள் வழங்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தேல்தலுக்கு பிறகு புதனன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


கடந்த இரு தினங்களாக நீடிக்கும் கடல் சீற்றத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்துள்ளது.

மீன்பிடி தொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என முன்னெச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இலவசமாக மாத ரேசன் பொருட்கள் முழுமையாக கடற்கரை பகுதிகளில் வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது. அதோடு 19 குடும்பங்களைச் சேர்ந்த 69 நபர்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதனன்று துவங்கிய கடல்சீற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.


வெள்ளியன்று 2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் கடல் அலைகள் சீறி எழுந்தன. ஞாயிற்றுக்கிழமை வரை கடல்பகுதியில் பலமான காற்று வீசவாய்ப்புள்ளதாகவும் மீன்பிடி தொழிலாளிகள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் உருப்பெற்றுள்ள புயலே இந்த கடல் சீற்றத்துக்கு காரணமாகும்.

;