கொச்சி, மார்ச் 28- கேரளத்தில் முதலாவது கோவிட் இறப்பு சனியன்று எர்ணாகுளம் கலமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ளது. மட்டஞ்சேரி சுல்லிக்கல் நகரைச் சேர்ந்த இவருக்கு வயது 69. மார்ச் 17 அன்று துபாயில் இருந்து கடுமையான நிமோனியாவுடன் வந்துள்ளார். 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தது. பைபாஸ் அறுவை சிகிச்சையும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. சனியன்று காலை எட்டு மணிக்கு இவர் மரணமடைந்தார். இவரது நெருங்கிய உறவினருக்கும், நெடும்பசேரியிலிருந்து இவரை கொண்டு வந்த வாகன ஓட்டுநருக்கும் கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்து.தற்போது கோவிட் பாதிப்புடன் 14 நபர்கள் கலமாசேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.