ஆலப்புழா, டிச.- சிஐடியு மாநில தலைவராக ஆனத்தலவட்டம் ஆனந்தன், பொதுச்செயலாளராக எளமரம் கரீம் எம்.பி,பொருளாள ராக பி.நந்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஆலப்புழாவில் கடந்த 3 நாட்களாக நடந்த சிஐடியுகேரள மாநில மாநாடு வியாழனன்று நிறைவடைந்தது. அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர். எம்.கே.கண்ணன், ஜே.மேழ்சி குட்டியம்மா, ஏ.கே.பாலன், கே.ஜே.தாமஸ், டி.பி.ராம கிருஷ்ணன், எஸ்.சர்மா, கே.கே.ஜெயச்சந்திரன், கே.பி. மேரி உள்ளிட்டோர் துணை தலைவர்களாகவும், கே.ஓ. ஹபீப், கே.கே.திவாகரன், கே.சந்திரன் பிள்ளை, என்.பத்ம லோச்சனன் உள்ளிட்டோர் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளில் பத்து பேர் பெண்களாவர். மாநாட்டின் நிறைவாக ஆலப்புழாவில் தொழிலாளர் பேரணி நடைபெற்றது.