tamilnadu

கோவிட் : கேரளத்தில் புதியது 193; வெளியிலிருந்து வந்தோர் 157; குணமடைந்தது 167 பேர்

திருவனந்தபுரம், ஜுலை 7- கேரளத்தில் திங்களன்று 193 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 92 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 65 பேர் இதர  மாநிலங்களில்  இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். திங்களன்று கோவிட்  ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: திங்களன்று தொடர்புகள் மூலம் 35பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டு மரணமும் நடந்துள்ளன. மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் முஹம்மது (82), கலமசேரி மருத்துவக்கல்லூரியில் யூசுப் சைபுதின் (62) ஆகியோர்  மரணமடைந்தனர். முஹம்மது சவுதி அரேபியாவில் இருந்து வந்த புற்றுநோய் நோயாளி. யூசுப் பல நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வந்தவர். திங்களன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 9927 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.. இதுவரை 5622  நபர்களுக்கு கேரளத்தில் கோவிட் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 2252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  183291 பேர்  கண்காணிப்பில் உள்ளனர். இதில் 2075 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் மற்றவர்கள் வீடுகள்/நிறுவனங்கள் கண்காணிப்பிலும் உள்ளனர். திங்களன்று 384 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 2,04,052 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் 4179 மாதிரி களின் முடிவுகள் வரவேண்டும்.   சமூக தொடர்பு அதிகம் உள்ள சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், பொதுநல ஊழியர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினிரின் 60006மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

;