tamilnadu

img

கேரளத்தில் ஒரே நாளில் 4125 பேருக்கு கோவிட்... நோய் பரவல் நிலைமை தீவிரமானது... முதல்வர்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் செவ்வாயன்று 4125 பேருக்கு கோவிட்  உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முத வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: கோவிட் காரணமாக செவ்வாயன்று 19 மரணங்கள் ஏற்பட்டன. இதோடு கேரளத்தில் கோவிட் மரணம் 572ஆக உயர்ந்துள்ளது. செவ்வாயன்று நோய்கண்டறியப்பட்டவர்களில், 33 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 122 பேர் பிற மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். தொடர்பு மூலம் 3875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 412 பேருக்கான தொடர்பு ஆதாரம் தெளிவாக இல்லை. 87 சுகாதார ஊழியர்கள் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 2,20,270 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில், 1,94,488 பேர் வீடு / நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும், 25,782 மருத்துவமனைகளில் கண்காணிப்பிலும் உள்ளனர். மொத்தம் 2,430 பேர் செவ்வாயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த 3007 பேர் செவ்வாயன்று குணமடைந்தனர். இதுவரை 1,01,731 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 40,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் 38,574 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. வழக்கமான மாதிரிகள், விமான நிலைய கண்காணிப்பு, பூல்ட் சென்டினல், சிபிநாட், ட்ரூனாட், சிஎல்ஐஏ மற்றும்ஆன்டிஜென் அஸ்ஸே உள்ளிட்ட மொத்தம் 24,92,757 மாதிரிகள் இதுவரை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் அதிக சமூக தொடர்பு கொண்ட நபர்கள் போன்ற முன்னுரிமை குழுக்களிடமிருந்து 1,97,282 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. செவ்வாயன்று 9 புதிய ஹாட்ஸ்பாட்கள் பட்டியலிடப்பட்டன. 7 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டில் இருந்து விலக்கப் பட்டுள்ளன. கேரளத்தில் இதன் மூலம், தற்போது 639 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன.

;