tamilnadu

img

மரடு அடுக்கு மாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்ப்பு

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பான முறையில் தகர்க்கப்பட்டுள்ளது. 
மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடிக் கட்டிடத்தில்  மொத்தம் 343 வீடுகள் இருந்தன. இந்த விதிகளை மீறி கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு  தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த குடியிருப்புகளை இடிக்குமாறு உத்தரவிட்டது.
அதையடுத்து, அதற்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், குடியிருப்பை இடிக்கும் பணி இன்று நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். எனினும், அனைத்து மக்களும் வெளியேறி விட்டனரா என்று காவல் துறையினா் ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனையிட்டனா். அந்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.  மரடு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாதனப் பொருள்களை அணைத்து வைத்து விட்டு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனா். நீா்வழி, வான்வெளி, சாலைவழி என அனைத்து வழி போக்குவரத்துக்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி கட்டிடத்தை  இடிப்பதற்காக அந்த குடியிருப்புகள் முழுவதும் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டு சற்று முன் பாதுகாப்பான முறையில் கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.
 

;