புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் மொத்தமாக 3,774 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் போதிய படுகை வசதியில்லாததால் 55.84 சதவீதம் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 4 நாட்களில் 29 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடத்த சில வாரங்களாகப் புதுச்சேரியில் கோவிட் தொற்றால் பாதிக்கபட்டர்வகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. தொற்றின் பாதிப்பு 14 நாட்களில் இரண்டு மடங்காக உயர்கிறதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்று கூறுகிறார் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால்.