tamilnadu

img

கேரளத்தில் புதிதாக 85 கோவிட் நோயாளிகள்...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் சனியன்று புதிதாக 85 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 53பேர் வெளிநாடுகளில் இருநதும் 18 பேர் இதர  மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவ ர்கள். 10 பேருக்கு தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 

நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் சனியன்று குணமடைந்தனர். இதுவரை 1045பேர் குணடைந்துள்ளனர். தற்போது 1342 பேர் சிகிச்சையில் உள்ளனர். விமானம் மூலம் 67,364 பேரும் கப்பல் மூலம் 1621 பேரும், சாலை வழியாக  1,36,735 பேரும் ரயில் மூலம் 26,819 பேர் உட்பட கேரளத்துக்கு மொத்தம் 2,32,539 பேர் வந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 2,35,418 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,33,429 பேர் வீடுகள்-நிறுவன கண்காணிப்பிலும் 1989 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். வெள்ளியன்று 223 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 5170 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை 1,09,729 நபர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வகங்கள் உட்பட) அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 3223 மாதிரிகளின் முடிவு நோய் தோற்று இல்லை என வந்தன.  மேலும், சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினிரின் 29,790 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 27,899 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதியானது. மறுமுறை ஆய்வு உட்பட மொத்தம் 1,44,842 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. வெள்ளியன்று மேலும் 2 தீவிர நோய் பரவல் பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டன. 13 பகுதிகள் தீவிர நோய் பரவல் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன. தற்போது கேரளம் முழுவதுமாக 117 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.

;