திருவனந்தபுரம், ஜுன் 14- கேரள அரசின், மகளிர் சிறு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 6623 அங்கன்வாடிகள் 26 மினி அங்கன்வாடிகளுக்கு தள வாடங்கள் வாங்க ரூ.6.64 கோடிக்கான ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கே.கே.சைலஜா செய்தி யாளர்களிடம் மேலும் கூறிய தாவது: 6623 அங்கன்வாடிக ளுக்கு தலா ரூ.10,000 வழங் கப்படும். 26 மினி அங்கன்வா டிகளுக்கு தாலா ரூ 7,000 அனு மதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டமான இதை 60:40 என்கிற விகிதத்தில் மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன என்றார். கேரளத்தில் கோவிட்-19 நோய் தொற்று பர வத்தொடங்கியதைத் தொடர் ந்து மகளிர் சிசு மேம்பாட்டுத் துறை பெரும் சேவயைாற்றி வருகிறது. அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு உள்ளிட்ட ஐசிடிஎஸ் சேவை களை வீடுகளில் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன. கேர ளத்தில் உள்ள சுமார் 3.75 லட்சம் அங்கன்வாடி குழந் தைகள் இதன் மூலம் பலன டைந்தனர். இதோடு சுமார் 3 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னைய ருக்கும் சுமார் 2 லட்சம் வளர் இளம் பெண்களுக்கும் 4.75 லட்சம் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சத்துணவுகள் வீடுகளில் ஒப்படைக்கப்பட்டன. அங்கன்வாடிகள் மூடப் பட்ட நிலையில் சுமார் 66,000 அங்கன்வாடி ஊழியர்கள் கோ விட் எதிர்ப்பு நடவடிக்கை களில் முழுமையாக ஈடுபட்ட னர். கோவிட் கால அளவில் இதுவரை மாநிலத்தில் சுமார் 45 லட்சம் முதியோர்களின் உடல்நிலை குறித்த விவ ரங்களை அங்கன்வாடி ஊழி யர்கள் அறிந்து கொண்டு அவர்களது உடல் நலனை உறுதிப்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார்.