திருவனந்தபுரம், ஜுன் 14- அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ மாணவியரும் ஆன்லைனில் பாடம் கற்க வசதியாக இந்திய மாணவர் சங்கம் மேற்கொண்ட ‘பஸ்ட் பெல் டிவி சேலஞ்ச்’ என்கிற திட்டத்தின்படி 3228 தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட் கொள்ளை நோயை எதிர் கொள்ள ஊர டங்கின் பகுதியாக உலகம் முழுவதும் கல்வி நிலை யங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் உள்ளிட்ட கல்வி செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதி லிருந்து மாறுபட்ட காட்சி யாக கேரளத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. வழக்கம்போல் ஜுன் முதல் தேதியில் கல்வி ஆண்டுக் கான பாடங்கள் துவக்கப் பட்டன. ஆனால், பள்ளிகளை திறக்காமல் வீடுகளில் இருந் தே கற்கும் ஆன்லைன் வகுப் புகள் அவை. முன்னதாக கல்வித்துறை நடத்திய கணக் கெடுப்பில் 2.61 லட்சம் மாணவர்களது வீடுகளில் தொ லைக்காட்சி பெட்டி அல்லது இணைய வசதி இல்லாதது கண்டறியப்பட்டது.
கல்வித்துறையின் நேரடி வகுப்புகளான ‘பஸ்ட் பெல்’ அத்துறையின் விக்டேர்ஸ் டிவி சானல் மற்றும் யுடியூப் தளத்தில் ஒளிபரப்பாகி வரு கிறது. அவற்றைப் பார்த்து கற்க வாய்ப்பற்ற நிலையில் உள்ள மாணவர்களின் குறையைப் போக்க கேரள அரசின் நிதி நிறுவனமான கிப்பி, பல்வேறு துறை கள், தனியார் நிறுவனங்கள், மாணவர், இளைஞர் அமைப் புகள் தொலைக்காட்சி பெட்டி களை வழங்கி வருகின்றன. இந்திய மாணவர் சங்கம் ‘பஸ்ட் பெல் டிவி சேலஞ்ச்’ என்கிற திட்டத்தை அறிவித்து நன்கொடையாளர்களின் உதவியுடன் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கி வரு கிறது. அதன்படி கண்ணூர், பாலக்காடு, மலப்புறம் மாவ ட்டங்களில் அதிக பட்சமாக தலா 500 டிவிகள் உட்பட கேர ளம் முழுவதும் 3228 டிவி களை வழங்கியுள்ளது. மாணவர் சங்கத்தின் இந்த முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் சங்கத்தின் மாநிலக்க்குழு நன்றி தெரி வித்துள்ளது.
பாடங்கள் இன்று தொடக்கம் |
கேரளத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான ஆன்லைன் வகுப்புகளில் திங்கள் முதல் பாடங்கள் நடத்த ப்படுகின்றன. இரண்டுவார சோதனை முறையிலான கற்பி த்தலுக்குப்பிறகு முறையான வகுப்புகள் துவக்கப்ப டுகிறது. எங்கேனும் ஒரு குழந்தைக்கு டிவியோ, ஸ்மார்ட் போனோ இல்லாமல் ஆன்லைன் கற்றலுக்கு தடை ஏற்படுவது தெரிந்தால், உடனடியாக பள்ளியின் ஹைடெக் வகுப்பறைகளில் உள்ள மடிகணினியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத் கூறினார். |