tamilnadu

img

தேர்தல் வேட்பாளர்களின் பிரசார செலவு 10% உயர்வு

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் படி தேர்தல் வேட்பாளர் பிரசார செலவை 10 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

தேர்தல் வேட்பாளர் பிரசார செலவை 10 சதவிகிதமாக உயர்த்த 1961 தேர்தல் சட்ட விதிமுறையில் மத்திய சட்டத்துறை அமைச்சகமானது மாற்றம் செய்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக இருக்கும் செலவுத் தொகை ரூ.77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் செலவினத் தொகை மாறுபடும். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேட்பாளர் செலவின வரம்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.30.80 லட்சமும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.77 லட்சமாகவும் உயருகிறது.