tamilnadu

img

உலகக்கோப்பை குத்துச் சண்டை போட்டி இந்திய வீராங்கனை மீனா குமாரி வென்றார் தங்கப்பதக்கம்

ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மீனாகுமாரி மைஸ்னம் 54 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார்.


ஜெர்மனியின் கோலங்னே நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை குத்துச்சண்டைப் போட்டியின் 54கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் மோதிய இந்தியாவின் மீனாகுமாரி மைஸ்னம் தாய்லாந்து வீராங்கனை மச்சாய் புனியானட்டை புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை பெற்றார். இதற்கு முன்பு நடந்த பிரபல ஸ்ட்ரேஞ்சா கோப்பையை மீனாகுமாரி வென்றிருந்தார்.


மேலும், நடந்து முடிந்த இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் சார்பில் சாக்சி 57கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கமும், 64கிலோ எடைப்பிரிவில் விலவோ பசுமத்தரி வெள்ளிப்பதக்கமும், 51 கிலோ எடைப்பிரிவில் பின்கி ராணி வெண்கலப்பதக்கத்தையும் மற்றும் 60 கிலோ எடைப்பிரிவில் பிரவீன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.


;