தேனி:
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கன மழையால் சோத்துப்பாறைஅணை 121 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால்வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை, சோத்துப்பாறை அணையின்நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1ஆம் தேதி முதல் பரவலாக கன மழை பெய்துவருவதால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் சனிக்கிழமை காலைஅணையின் நீர் மட்டம் 121.28 அடியாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் விடுத்துள்ளசெய்தி குறிப்பில் வராகநதி ஆற்றங்கரையோரமாக உள்ள பெரியகுளம்,வடுகபட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிமக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.அணைக்கு நீர் வரத்து 13 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.
வைகை
வைகை அணையின் நீர்மட்டம் 61.52 அடி,..பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடி. .மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடி. மழையளவு: (மி.மீட்டரில்) பெரியாறு அணை 16.2, தேக்கடி 8.4