tamilnadu

img

சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் மூடல்

குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டுள்ளது. 
குஜராத் ஹிராப்பூர் பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக நித்தியானந்தா ஆசிரமம் செயல்பட்டு வந்தது. ஆனால் பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயல்பட அனுமதி பெற்ற சான்றிதழ் இருப்பதாக நித்தியானந்தா ஆசிரம நிர்வாகம் தெரிவித்தது. விசாரணையில் ஆசிரம நிர்வாகம் தரப்பில் காட்டப்பட்டது போலிச்சான்றிதழ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் செயல்பட்ட ஆசிரமம் மூடப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஆசிரமம் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நித்தியானந்தா ரஞ்சிதா குறித்த வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன், மகள்களை நித்தியானந்தா கடத்தி வைத்துள்ளார் என்று புகார் அளித்த ஜனார்த்தன சர்மா, மற்றும் நித்தியானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் அளித்த சாராலண்ட்ரி ஆகிய அனைவரும் நித்தியானந்தாவின் சீடர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய ஜனார்த்தன சர்மாவின் மகளும், சாராலண்ட்ரியும் ஆசிரமத்தில் குழந்தைகள் கொடுமை படுத்தப்படுவதாக வெளிப்படையாக குற்றம் சாட்டி உள்ளனர்.