tamilnadu

img

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘உன்னால் முடியும்’ நிகழ்ச்சி

ஓசூர், ஏப்.27-ஓசூர் பி.எம்.சி டெக் சார்பில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் “உன்னால் முடியும்” என்ற உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவர் பொறியாளர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மலர் துவக்கி வைத்தார். பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் சுதாகரன், முதல்வர் பாலசுப்ரமணியம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ரோட்டரி சங்கத் தலைவர் கிரிதரன், கிருஷ்ணகிரி அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் மரகதவேல் ஆகியோர் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் பேராசிரியரும், பேச்சாளருமான ஜெயந்திசிறீ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், இந்தியா வளமான நாடாக மாற கல்வித்துறை மிகச்சிறந்த பங்களிப்பை செய்து வருகிறது. உலக அளவில் நம் நாட்டின் பெருமைகளை மாணவர்கள் எடுத்துச் செல்கிறார்கள். செய்யும் செயலை கவனம் சிதறாமல் செய்தால் வெற்றி நிச்சயம் என்றார்.கல்வியாளர் ரமேஷ் பிரபா, ‘என்ன படிக்கலாம்.., எங்கு படிக்கலாம்..அதைஎப்படி தேர்வு செய்வது’ என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் விளக்கமளித்தார்.கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

;