tamilnadu

கொரோனா கண்காணிப்பில் உள்ளவர்கள் விட்டிலேயே இருக்க வேண்டும்: ஆட்சியர்

கிருஷ்ணகிரி,மார்ச் 23- வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என பரிசோ தனை செய்தவர்களில், வீட்டிலேயே தனி அறையில் இருக்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டவர்கள் வெளியே வர கூடாது  என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்துள் ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து வீடு களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நபர்கள் 28 நாட்கள் தங்களது வீட்டின் தனி அறையில் தங்க வேண்டும். அவரது உற வினர்கள், குடும்ப உறுப்பி னர்கள் 2 மீட்டர் தள்ளி நின்று பேச வேண்டும். மேற்படி தனி வீட்டில் இருக்கும் நபர் கள் தொடர்ந்து மருத்துவத் துறை, வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச் சித்துறை ஆகிய துறை அலுவலர்களால் கண் காணிக்கப்படுவார்கள்.  தனி மைப்படுத்தப்பட்ட நபர்க ளின் வீட்டிற்கு வெளி நபர்கள் யாரையும் அனு மதிக்க கூடாது. மேலும் தனி மைப்படுத்தப்பட்ட வர்கள் வீட்டிற்கு வெளியே வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களி லிருந்து வருகை தந்த நபர்க ளின் பெயர்கள் விடுபட்டி ருந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077, வாட்ஸ் ஆப் எண் 6369700230 என்ற எண்ணில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது சுகா தாரத்துறை இணை இயக்கு நர் மற்றும் துணை இயக்கு நர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து தங்களை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத் தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் பொருட்கள் மற்றும் மருந்து அங்காடிகளுக்குச் செல்லும் போது கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் 2 மீட்டர் இடைவெளியில் சென்று பொருட்களை வாங்க வேண்டும்.  கடை உரிமையாளர்கள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கடையை சுத்தம் செய்து கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள அத்தனை சட்டதிட்டங் களுக்கு கட்டுப்பட்டு பொது மக்கள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஒத்து ழைப்பு நல்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;