tamilnadu

img

கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

பெற்றோர்களை இழந்த மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி கொன்சகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. பெற்றோர் இருவரையும் 
இழந்தவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், பெற்றோரில் ஒருவரை இழந்தவருக்கு ரூ. 7,500 என்றும் 86 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை ஐவிடிபி நிறுவனர் ராமன் மகசேசே, விருதாளர் ஐவிடிபி நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். கல்லூரியின் செயலாளர் அருட்சகோதரி நோயல் ராணி தலைமை தாங்கினார்.  முதல்வர் அருட்சகோதரி சுமங்கலி கிளிட்டா, துணை முதல்வர் அருட்சகோதரி டயானா ஆகியோர் உடனிருந்தனர்.

;