tamilnadu

img

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு இஐஏ 2020 எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை

கிருஷ்ணணகிரி, ஆக. 9- மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 2020 மார்ச் மாதம் சுற்றுச்  சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்டுள்ளது. கொரோனா தொற்று உச்சநிலையில் உள்ள சூழலில் முழு மையான கருத்துக்கள் பெற வாய்ப்பில்லை.  இந்த வரைவு அறிக்கையில் கருத்துக் கேட்பு காலம்  முப்பதிலி ருந்து 20 நாட்களாக  குறைக்கப் பட்டுள்ளது. மேலும் சூழலுக்கு கடும்  மாசு விளைவிக்கும் பல  திட்டங்க ளுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தேவையில்லை என வகைப்படுத்தியுள்ளது. இதுவரை சுற்றுச் சூழல் அனுமதி சட்டங்களை  மீறியவர்களுக்கு ஒப்புதல் கொடுக்  கும் அவல நிலையும் உள்ளது. பல  திட்டங்களுக்கான கால வரம்பு 50  வருடங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இவையனைத்தும்  சுற்றுச் சூழலுக்கும், இயற்கை  வளங்களுக்கும், வாழ்வாதாரங்க ளுக்கும், மக்களின் உடல் நலத்திற்கும் மிகப் பெரும் கேடு விளைவிக்கும்.

மேலும் இந்த வரைவு அறிக்கை  ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மொழியில் வெளி யிடப்படாததால் பெரும்பான்மை யினர் கருத்துக் கூற வாய்ப்பில்லை. கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரி யம்தான் அந்தந்த மாநில மொழி களில் அந்த அறிக்கையை மொழி பெயர்த்து வழங்க வேண்டுமென மத்திய அரசின் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்ப டையில் இங்கு தாய்மொழி  தமிழில் வழங்கினால் பெரும்பான்மையான மக்கள் கருத்துக்  கூற ஏதுவாக  அமையும். தற்போது வெளி யிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை  கொரோனா  காலத்தில் நியாயமற்ற தும் மக்களின் முழுமையான கருத்துக் கேட்க இயலாத நிலையில்  உள்ளது.

எனவே, இந்த வரைவு அறிக் கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கூட்ட மைப்பின் சார்பில் ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் துரை, செயலாளர் நீல கண்டன், பொருளாளர் ஸ்ரீனிவாசலு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன், செயற்  குழு உறுப்பினர் சிவகுமார், கண்மணி  ஆகியோர்  ஓசூர் சார் ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர், மாவட்ட மாசு  கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரி டம் மனு அளித்தனர்.

;