கிருஷ்ணகிரி, மார்ச் 15- ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி யில் நாட்டு நலப்பணித் திட்டமும், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை யும் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கை நடத்தி னர். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் முத்து மணி தலைமை தாங்கினார். மாவட்ட பூச்சியியல் துறை வல்லுநர் முத்து மாரியப்பன், அரசு மருத்துவர் சுஷ்மிதா, ஓசூர் வட்டார சுகாதார துறை யினர் மோகன், கருப்பசாமி, சுமதி, அருண்குமார், அந்தோணி ராஜன், தமிழன் பன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் லெனின், விஜய லட்சுமி வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன் ஆகி யோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.