tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் போட்டி

ஓசூர்,டிச.1- ஓசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் பள்ளி களுக்கு இடையே அறிவி யல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் துவக்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் லயன் மு. எம்ஜி யார்  தலைமை தாங்கினார். ஓசூர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் ராஜ்மோகன் ராஜ்,வேதியியல் துறைத் தலைவர் சிலம்சரசன்,உதவி பேராசிரியர் ராஜலட்சுமியும் கலந்து கொண்டனர். கண்காட்சியில் செம்போர்டு பள்ளிக்கு முதல் பரிசும், விஜய் வித்யாலயா பள்ளிக்கு இரண்டாம் பரிசும், வனபிரச்தா பள்ளிக்கு மூன்றாம் பரிசும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் பரிசு களை வழங்கி வாழ்த்தி னார். ஓசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணி யன், வட்டாட்சியர் செந்தில் குமரன், நிர்வாகிகள் சுசிலா எம்ஜியார், மாருதி கிரின்பீல்டு லட்சுமணன், ஜெகன், முதல்வர் டாக்டர் மேரி ஜேக்கப்,நிர்வாக அலு வலர் பாஸ்கர், ஆசிரியர்கள் பங்கேற்புடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.