கிருஷ்ணகிரி, மே 29-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் சூடு கொண்டப் பள்ளி கிராமத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி நந்தீஸ்-சுவாதியை சாதி ஆணவப் படுகொலை செய்தனர். இந்த கொடூரத்திற்கு நீதி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர், மாதர் சங்கம், சிஐடியு, விவசாய சங் கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சி யாக போராட் டங்கள் நடத்தினர். இதன் விளைவாக சாதிஆணவப் படுகொலையாக வழக்கு பதியப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட நந்தீஸ் குடும்பத்திற்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் குறித்து தீண் டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர் நடவடிக்கை எடுத்து வந்தால் குடும்ப நிவாரண நிதி அரசிடமிருந்து கிடைத்துள்ளது. குடிநீர் பிரச்சனையும் உடனடியாக தீர்க்கப்பட்டது. தற்போது, நந்தீஸ் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டுக்கு இலவச பட்டாவை வட்டாட்சியர் பாலசுந்தரம் வழங்கினார். நந்தீஸ் சகோதரன் சங்கர் மற்றும் அவர் தாயார் பெற்றுக் கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி, மத்திகிரி கிளைச் செயலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.