tamilnadu

img

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 100 நாளும் வேலை வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 14- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி  வட்டம் நாட்ராம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் கிராமப்புற வேலை  வாய்ப்பு திட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வரு கிறார்கள். சுழற்சி முறையில் வேலை வழங்கப்படுவதால்,  தொழிலாளர்களுக்கு 30 நாட்கள், 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. கடந்த 4ஆம் தேதி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் அஞ்செட்டி வட்டத்தில் அனை வருக்கும் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்  போது நடந்த பேச்சுவார்த்தையில் தளி வட்டார  வளர்ச்சி அலுவலகத்தினர் பணி செய்வ தற்கான பொருத்தமான இடம் இல்லை என்றும் அதற்கான இடத்தை தேர்வு செய்து  கொடுங்கள் என்றும் கூறினார்கள். அதன டிப்படையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட குழு சார்பில் அஞ்செட்டி வட்டத்தில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள பல  ஏரிகள்,  குட்டைகள், கால்வாய்கள் முறையாக பரா மரிக்கப்படாமல் புதர் மண்டிக் கிடப்பதும், பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ள தும் தெரிய வந்தது. எனவே ஏரி, குளம், கால்வாய் ஆகிய வற்றை சீர்படுத்தி தூர்வார வேண்டும் என்றும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், இந்த பணிகளை அஞ்செட்டி வட்டம்  மற்றும்  நாட்ராம்பாளையம் ஊராட்சிக்குட்  பட்ட அனைத்து விவசாய தொழிலாளர்க ளுக்கும் சுழற்சி முறையில் இல்லாமல் முழு மையாக   வேலை வழங்க வேண்டும் என விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிர காஷ், வட்டச் செயலாளர் காவேரி, சி.பி.எம். வட்டச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வட்டாட்சியரிடம், வட்டார வளர்ச்சி அலு வலரிடமும் வலியுறுத்தியுள்ளனர்.

;