tamilnadu

img

அடிப்படை வசதி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப். 11- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் நாகோஜனஅள்ளி பகுதியில் வசித்த  தலித் மக்கள் கோரிக்கையை ஏற்று 2002இல்  நாகரசம்பட்டியில் குடிமனைக்கான இடம் 1.85 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. அன்றைய  முதல்வர் ஜெயலலிதா 2003இல் தருமபுரி விழாவில் 3 சென்ட் வீதம் 32 பேருக்கு அதே  இடத்தில் பட்டா வழங்கினார். ஆனால் அரசு  அதிகாரிகள் அந்த இடத்தை 32 பேருக்கு அளந்து கொடுக்காமல் தனியாருக்கு சாதக மாக இழுத்தடித்து வந்ததால் நிலம் நீதிமன்ற  வழக்கிற்கு உட்பட்டது. இதற்கிடையே பாதிக்  கப்பட்ட பயனாளிகள் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர், வாலிபர் சங்கங்கள் துணையுடன் தொடர்ந்து போராடி வந்தனர்.  இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு, அரசு மற்றும் பயனாளிகளுக்கு சாதகமாக வந்த தால் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமை யில் 2019 பிப்ரவரியில் 32 பயனாளிகளுக்கு 3 சென்ட் வீதம் பிரித்து வழங்கப்பட்டது. இதையடுத்து பயனாளிகள் அந்த இடத்தில் குடிசை போட்டு குடியிருந்து வரு கின்றனர். ஆதார், ரேசன் அட்டை, வாக்காளர்  அடையாள அட்டை, வீட்டு நில ரசீது, பட்டா  அனைத்தும் இருந்தும் கடந்த ஓராண்டாக அதிகாரிகள் சுகாதாரம், மின் விளக்கு, குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மறுத்து வருகின்றனர்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த இலவச வீட்டுமனை பட்டாவையும், இப்போதுள்ள மாவட்ட ஆட்சியர் பிரபாகர்  அளந்து கொடுத்ததையும் சில அதிகாரிகள் குழப்பம் செய்து அளவை குறைத்திட முயல்கின்றனர். மின் வசதி இல்லாததால் படிக்கும் மாணவர்கள் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது. கழிப்பிட வசதி இல்லாத தால் அந்த பகுதி மக்கள் சாலை ஓரம் சுகாதார மும், பாதுகாப்பும் இல்லாத சூழலில் சென்று இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலை உள்ளது. குடிநீருக்காக தினசரி பெண்  கள் பிரதான சாலையை கடந்து சென்று வர  வேண்டியுள்ளது. இதனால் சிலர் விபத்துக்  கும் உள்ளானார்கள். கழிவு நீர் கால்வாய்கள்  இல்லாததால் ஆங்காங்கே தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்  உள்ளது.  இதுகுறித்து கடந்த மாதம் 27ஆம் தேதி அந்த பகுதி மக்கள் விவசாயிகள் சங்க நிர்வா கிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து போச்சம்பள்ளி வட்  டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் கந்தன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில  துணைச் செயலாளர் டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் நிர்வாகிகள்  சின்னசாமி, மாதலிங்கம், சின்னராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வட்டாட்சி யர் முனுசாமியிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உடனடியாக பரிந்துரை செய்வதாகக் கூறினார்.

;