tamilnadu

img

திருப்பூரில் குடிநீர் குழாய்கள் உடைப்பு: சீரமைத்திட வாலிபர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், டிச. 31 – திருப்பூர் மாநகராட்சி பழைய 12ஆவது வார்டு பகுதியில் ஏற்பட் டுள்ள குடிநீர் குழாய் உடைப்பு களை சரி செய்து குடிநீர் பிரச்ச னைக்குத் தீர்வு காணுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவல கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகர, வ.உ.சி. நகர் கிளைத் தலைவர் கிருத்திகை வாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகர பழைய 12ஆவது வார் டுக்கு உட்பட்ட பிவிஜி நகர் பகுதி யில் கடந்த முறை பழுதுநீக்கும் போது எட்டு குடிநீர் குழாய்கள் உடைந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் மேல்மட்டத் தொட்டியில் நீர் நிரம்ப மிகவும் தாமதம் ஆகின்றது. இதனால் ஆறு வீதியில் உள்ள குடும்பங்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்ய முடியவில்லை. இந்த பழுதை நீக் காவிட்டால் எதிர்வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதைப் பழுது நீக்கித் தர வேண் டும். மேலும் இப்பகுதியில் சாக் கடையில் மிக அதிகமாக குப்பை கள் கொட்டப்பட்டு உள்ளன. இதைத் தூர்வார வேண்டும் என்று பல முறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் இன்னும் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. அதேபோல் வ.உ.சி.நகர் தெற்கு 1, 2, 3 வீதிகளில் வீடுக ளில் குப்பை சேகரிக்க சுகாதாரப் பணியாளர்கள் சரிவர வருவ தில்லை. அத்துடன் இங்கு ஆழ்குழாய் பழுதடைந்திருப்பது குறித்து கடந்த நவம்பர் 18ஆம் தேதி அதிகாரிகளிடம் மனுக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சில பிரச்சனைகள் குறைந்தன. ஆனால் தற்போது பல மாதங்களாக எவ்வித சுகாதாரப் பணிகளும் நடைபெறவில்லை. கொசுத் தொல்லை, நோய்த் தொற்று ஏற் பட்டு வருகிறது. எனவே இப்பகுதி யில் புதிய சாக்கடைக் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என் றும் வாலிபர் சங்கத்தின் வ.உ.சி.நகர் கிளை சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண் டுள்ளனர்.

;