tamilnadu

தலித் இளைஞர் படுகொலை: கொலை வழக்காக பதிவு செய்ய சிபிஎம் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக. 6- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் கொடியாளம் கிராமத்தில் வசிக்கும் தலித் இளைஞர் சுனில் என்பவரை அதே கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த  சிலர் கடுமையாக தாக்கி யுள்ளனர். இதில் படுகாய மடைந்த சுனில் சிகிச்சை பல னளிக்காமல் 4ஆம் தேதி உயிரிழந்தார். எனவே சுனிலை தாக்கிய வர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெய ராமன் வெளியிட்டுள்ள அறிக்  கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இத்தகைய தாக்குதல்கள் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாக தலித் மக்கள் அடிக்கடி தாக்கப்பட்டு உயி ரிழப்பது தொடர்கிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்  துறையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்  சூடுகொண்டப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஸ் - சுவாதி சாதி வெறி யர்களால் ஆணவப் படு கொலை செய்து உடலை கர்நாடகா மாநிலம் மண்டியா பகுதி காவிரி ஆற்றில் வீசப்பட்டது.  பாகலூர் சாணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நாக ராஜ் என்பவர் இருசக்கர வாக னத்தில் வேலைக்கு செல்லும்  போது வழிமறித்து கடுமை யாக தாக்கப்பட்டார். இது குறித்து அவரது பெற்றோர்  பாகலூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வரும்போது, சாதி வெறியர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளா னார்கள். இது போன்ற சம்பவங் கள் ஓசூர் பாகலூர் பகுதி யில் தொடர்ந்து நடைபெறு கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் சாதி வெறியர்கள் ஊக்க மடைந்து வருகிறார்கள். எனவே தலித் மக்கள் மீதான சாதிவெறியர்களின் கொலைவெறித் தாக்குதல் களை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த சுனில் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணமடைந்த சுனில் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;