tamilnadu

img

இன்னும் 31 நாட்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து 2019

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இங்கிலாந்து நாட்டில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை பலம் வாய்ந்த அணி, பலம் குறைந்த அணி என இரண்டு வேறுபாடுகளுடன் அணிகள் பிரிக்கப்பட்டாலும் ஆட்டமுறையில் மட்டும் சில அணிகள் மாறுபட்ட ஆட்டமுறைகளை பின்பற்றும்.வித்தியாசமான ஆட்டமுறை உள்ள அணிகளைப் பற்றி பார்ப்போம்: கிரிக்கெட்டில் வேகம்,மிதவேகம், சுழல் என மூன்று வகையான பந்துவீச்சு முறையை பெரும்பாலான அணிகள் கண்டிப்பாக பயன்படுத்துவார்கள்.அதாவது 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் 2 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவார்கள். ஆனால்,ஆஸ்திரேலிய அணி வேகப்பந்துவீச்சை மட்டும் தான் விரும்பும்.சம்பிரதாயத்துக்கு மட்டும் ஒரு சுழற்பந்துவீச்சாளரைக் களமிறக்கும். மற்றபடி வேகம் தான்.ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் சராசரியாக 140 கிமீ வேகத்தில் பந்துவீசுவார்கள்.அதற்குக் கீழ் பந்துவீசுவதை விரும்ப மாட்டார்கள்.


பந்துவீச்சில் இப்படி என்றால் பேட்டிங்கில் இவர்கள் வேறு ரகம் தான்.11 வீரர்களும் பேட்டிங் செய்து எதிரணியை திணறவைப்பார்கள்.எந்த நிலையிலும் தொடக்கத்தில் அதிரடி மூலம் ஆட்டத்தைத் தொடங்குவார்கள்.பிட்சின் மையத்தைக் கணிக்க மட்டும் இரண்டு ஓவர்கள் வீணடிப்பார்கள்.அதன் பிறகு வாணவேடிக்கை தான்.  பீல்டிங்கில் யோ-யோ முறையை விட கடினமாகப் பயிற்சி பெறுவார்கள். பந்துகளை உடும்பு பிடி போல் பிடிக்கும் வல்லமை பெற்றவர்கள்.தங்கள் அணி தோல்வியடையும் நிலையிலிருந்தால் ஸ்லெட்ஜிங் முறையை பின்பற்றி எதிரணி வீரர்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள்.அதுவும் எடுபடவில்லை என்றால் சித்து விளையாட்டை ஆரம்பிப்பார்கள்.தோல்வியடைந்தால் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள்.சில வீரர்களின் கண்ணில் மட்டும் வியர்க்கும்.பார்ம் பிரச்சனையிலிருந்து விரைவாக மீளும் ஒரே நாடு என்றால் அது ஆஸ்திரேலிய தான். நன்றாக விளையாடினாலும் சரி, மோசமாக விளையாடினாலும் சரி அணி வீரர்களை அடிக்கடி மாற்றுவார்கள்.மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் ஆஸ்திரேலிய அணி சற்று வித்தியாசமாகத் தான் விளையாடும்.வரவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி அசுர பலத்துடன் களமிறங்குகிறது.அணி வீரர்கள் மற்றும் கோப்பை வெல்லும் வாய்ப்பு போன்றவற்றை அடுத்து வரும் தொகுப்பில் விரிவாகக் காணலாம்...

;