tamilnadu

img

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ஸ்மிர்தி மந்தனா!

விஸ்டன் பத்திரிகையின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலி தொடர்ச்சியாக 3-வது வருடம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதில் பெண்கள் கிரிக்கெட் வீரர் ஸ்மிர்தி மந்தனா பெயரும் இடம் பெற்றுள்ளது.

விஸ்டன் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு கவுரவிக்கும்.இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலி பெயரும், இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்மிர்தி மந்தனா பெயரும் இடம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு முறையும் விராட் கோலியின் பெயர் இடம் பெற்றது. தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையும் அவரது பெயர் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

;