tamilnadu

img

கிரிக்கெட்டிலிருந்து வேணுகோபால் ராவ் ஓய்வு

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேணு கோபால் ராவ் டிராவிட் தலை மையில் இந்திய அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளில் (2005 - 2006) விளையாடி யுள்ளார்.  சர்வதேச தொடர்களில்  குறைவாக விளையாடினா லும் முதல் தர போட்டிகளில் தணிகாட்டுராஜாவாக வலம் வந்த வேணுகோபால் 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் இடம்பெற்றிருந்தார். 2014-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு (சன் ரைசர்ஸ்) கிரிக்கெட் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டு வர்ணனையாளராக மாறினார். தனது கிரிக்கெட் வாழ்வை ஊடக துறைக்கு மாற்றினாலும் ஓய்வு பற்றி எவ்வித தகவலும் அளிக்காமல் வர்ணனையாளர் பணியில் அதிக கவனம் செலுத்தினார்.    இந்நிலையில் புதனன்று தனது ஓய்வு முடிவை அறி வித்துள்ளார். 37 வயதாகும்  வேணுகோபால் ராவ் துடிப்பாக பேட்டிங் செய் பவர். சேசிங்  முறையில் பதற்றமில்லாமல் ரன்  குவிக்கும் திறன் படைத்தவர். பகுதி நேரமாக  பந்து (சுழல்) வீசுவார். களத்தில்பம்பரமாகச் சுழலுவார் என்பது குறிப்பிடத்தக்கது.