தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரூபா குருநாத் கோல்ப் (GOLF) வீராங்கனை ஆவார். தனது கணவர் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கிய பொழுது ஐபிஎல் போட்டியைக் காண சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடிக்கடி விசிட் அடிப்பார். இந்த காலகட்டத்தில் கிரிக்கெட் நுணுக்கங்களை நன்கு கற்றுக் குறுகிய காலத்தில் கிரிக்கெட் சங்கத் தலைவராக உயர்ந்துள்ளார். ஐபிஎல் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனின் மனைவி தான் இந்த ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.