tamilnadu

img

இன்று தொடக்கம்

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 

இந்தியா - வங்கதேசம் 
இடம் : ஹோல்கர் மைதானம், இந்தூர் 
நேரம் : காலை 9:30 மணி 

மழைக்கு வாய்ப்பில்லை.வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் காலடி வைத்துள்ளது.  2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்  ஆட்டம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான இந்தூ ரில் வியாழனன்று காலை 9:30 மணிக்குத் தொடங்குகிறது.  டெஸ்ட் தொடரில் அசுர பலத்தில் இருக்கும் இந்திய அணியை வங்கதேசம் சமாளிப்பது சிரமமான விஷயம் என்றாலும், டி-20 தொடரை இழந்த ஏக்கத்தில் குடைச்சல் வேலைகளைச் செய்து ஆட்டத்தை டிரா செய்யும் முனைப்பில் வங்கதேசம் களமிறங்குகிறது. வெற்றிகளைத் தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இதனால் இந்தூர் டெஸ்ட் போட்டி பரபரப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரில் வங்கதேச அணிக்கு இது முதல் போட்டியாகும். இந்திய அணிக்கு இது 6-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;