இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் விடாலிடி ப்லாஸ்ட் டி-20 தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளரும் லீஸ்செஸ்டெர்ஷைர் அணியின் கேப்டனுமான காலின் அக்கர்மன் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி (பிர்மிங்ஹாம் பியர்ஸ் அணிக்கெதிராக) புதிய வரலாறு படைத்துள்ளார். 2011-ஆம் ஆண்டு இதே தொடரில் மலேசிய பந்துவீச்சாளர் அருள் சுப்பையா 5 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே முந்தைய உலக சாதனையாக இருந்தது.8 ஆண்டுகளுக்குப் பிறகு காலின் அக்கர்மன் அச்சாதனையைத் தகர்த்துள்ளார். காலின் அக்கர்மன் சாதனை படைத்திருப்பது சாதாரண உள்ளூர் டி-20 தொடராக இருந்தாலும் திறமைக்குப் பெயர் பெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை எளிதில் எட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 13
கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி-20 தொடரில் சம்பள பிரச்சனை காரணமாக 2 அணிகள் போட்டியில் பங்கேற்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் மைக் ஹெஸ்சன்.
இந்திய ‘ஏ’ அணியின் சுழற்பந்து வீச்சாளரான கிருஷ்ணப்பா கவுதம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.