tamilnadu

img

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி-20 என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொட ரில் பங்கேற்கப் பாகிஸ்தான் செல்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.  பாகிஸ்தான் மண்ணில் 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாதிகள் தாக்குதலைக் கருத்தில் கொண்டு கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன்கள் மேத்யூஸ், சன்டிமால் மற்றும் திசாரா பெரேரா உள்ளிட்ட 10 சீனியர் வீரர்கள், “பாகிஸ்தான் மண்ணில் விளையாட விருப்பமில்லை” என அறிவித்தனர். இலங்கை வீரர்களின் இந்த முடிவுக்கு இந்திய அரசு மற்றும் ஐபிஎல் நிர்வாகம் தான் காரணம் எனப் பாகிஸ்தான் நாட்டின் தொழில்நுட்ப அமைச்சர் பவத் உசேன், முன்னாள் வீரர் அப்ரிடி ஆகியோர் குற்றம் சாட்டினர். 

“இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பது அவர்களின் சொந்த விவகாரம். இந்திய அரசுக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனக் கூறி இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாகிஸ்தான் அரசின் வாயையடைத்தார். பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்குத் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் இலங்கை அணி பாகிஸ்தான் செல்வது சந்தேகம் தான்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இலங்கை அணி திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடை பெறும் தொடரில் பங்கேற்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் வழக்கம் போல வாய்மொழி உத்தரவிட்டது. 

இது வெறும் வாய்ச்சொல் என எதிர்பா ர்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் முக்கிய நகரான கராச்சி விமானநிலையத்தில் திடீரென இலங்கை கிரிக்கெட் வீரர்கள் களமிறங்கினர். இலங்கை அணி பாகிஸ்தா னுக்குச் செல்லும் செய்தி ரகசிய பொருளாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் செல்ல மறுத்த சீனியர் வீரர்கள் அணியி லிருந்து கழற்றி விடப்பட்டு கத்துக்குட்டி வீரர்களுடன் இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் காலடிவைத்துள்ளது. இந்த திரில் சுற்றுப்பய ணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் (கராச்சி) வருகிற 27-ஆம் தேதி தொடங்குகிறது. பாதுகாப்பு பிரச்சனைகளால் கராச்சி, லாகூர் என 2 மைதானங்களில் மட்டுமே ஒருநாள் மற்றும் டி-20 தொடர் நடைபெறுகிறது. 

ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு 

பாகிஸ்தான் நாட்டின் உயர் பாதுகாப்புத் துறையான என்எஸ்சி (NSC- NATIONAL SECURITY CONCIL) அமைப்பு இலங்கை வீரர்களுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு அந்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். 

இலங்கை அணிக்கு லஞ்சம்? 

இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை வீரர் களுக்குப் பாகிஸ்தான் அரசு பணத்தை லஞ்சமாக வாரி வழங்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஹசிம் கான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

;