tamilnadu

img

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக ஷேன் வாட்சன் நியமனம்

ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஏசிஏ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்களான பாட் கம்மின்ஸ், கிறிஸ்டன் பீம்ஸ், மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லிசா ஸ்டாலேகர் ஆகிய மூன்று புதிய நியமனங்கள் அடங்கிய 10 நபர்கள் கொண்ட குழுவின் ஒரு பகுதியாக வாட்சன் உள்ளார். 

இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘தலைவராக நியமனம் செய்யப்பட்டதை உண்மையிலேயே மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். மிகப்பெரிய கடமை என்முன் காத்திருக்கிறது. மீண்டும் கிரிக்கெட்டிற்குள் வர இது வாய்ப்பாக அமைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.